Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மின் பராமரிப்பு பணி” எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. பலியான மின் ஊழியர்….!!

மின்சாரம் தாக்கி மின்வாரிய  ஊழியர்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி புள்ளாக்கவுண்டன் பட்டிஅருகே உள்ள கொடாரபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் குருநாதன்.இவர் எதிர்மேடு மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகின்றார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புக்காக சக ஊழியர்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அதன் பிறகு குருநாதன் கம்பத்தில் இருந்து கீழே இறங்கும் போது எதிர்பாராதவிதமாக கை தவறி கீழே விழுந்தார். அதில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட குருநாதன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்கின்றனர்.

Categories

Tech |