தனது வீட்டு விருந்தில் இருந்த நடிகர்-நடிகைகள் போதை பொருள் எடுத்துக் கொள்ளவில்லை என இந்திப்பட தயாரிப்பாளர் கரன் ஜோகர் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு மும்பையில் கரண் ஜோகர் இல்லத்தில் நடைபெற்ற விருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விருந்தில் நடிகர்கள் ஷாகித் கபூர், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர், வருண் தவான், அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா, விக்கி கவுசால் பலரும் இருந்தனர். அந்த வீடியோவில் விருந்தில் இருந்த நடிகர்-நடிகைகள் போதைப்பொருட்களை உட்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமான கரண் ஜோகர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எந்த ஒரும் உண்மையும் இல்லாதவை என்றும் தான் போதை பொருள் சாப்பிட்டதும் இல்லை அதனை எடுத்துக்கொள்ள அறிவுறித்தியதும் இல்லை என பதிவிட்டுள்ளார் .