தனியார் பள்ளிகள் தங்கள் கட்டண நிர்ணய முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தால் நாட்டின் பொருளாதாரம் பெரும் அளவில் சரிந்து போயுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியும் கேள்விக்குறியாகியுள்ளது. இவற்றையெல்லாம் மீட்டெடுக்கும் வகையில் தான் மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை அறிவித்து வருகின்றன. பல்வேறு வகைகளில் மக்களுக்கு சலுகை அறிவிப்புகள் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்தடுத்து பல்வேறு உத்தரவுகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பித்தன.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டண முறைகேடு நடைபெறுகிறது, கட்டண கொள்ளை நடைபெறுகிறது என அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன. இவற்றையெல்லாம் தடுக்கும் வகையில் தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இந்த குழுவிடம் பள்ளிகள் தங்களது கட்டண நிர்ணய முன்மொழிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது தனியார் பள்ளிகள் கட்டண முன்மொழிவை சமர்பிப்பதற்கான கடைசி தேதி தற்போது அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சுற்றறிக்கை வெளியிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.