கொரோனா காலத்தை வீணாக்காமல் பயனுள்ளதாக மாற்றி வளரும் விஞ்ஞானிகள் வரிசையில் இடம்பிடித்துள்ள அரசுப்பள்ளி மாணவனுக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.
கொரோனா பெருந்தொற்று பரவியதையடுத்து நாடு முழுவதும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் முதல் அடைக்கப்பட்டதால் மாணவர்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டது. இதில் பலரும் புதுவிதமான அற்புத விஷயங்களை கற்றுக் கொண்டனர். இதுகுறித்து செய்தி தொகுப்பை கூட நாம் ஏராளமாக படித்து இருப்போம்.
அந்த வரிசையில் தற்போது ஒரு அரசு பள்ளி மாணவனும் இணைந்துள்ளன. ஊரடங்கு காலத்தில் தனக்கென்று ஒரு யூடியூப் சேனலை உருவாக்கி, புதிய புதிய படைப்புகளை பதிவேற்றி அசத்தி உள்ளார். அனைத்து மாணவர்களுக்கும் முன்னுதாரணமாக விளங்க கூடிய அளவில் இருந்து வருகின்றார்.
மாணவனின் இப்படியான முயற்சி அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் இந்த மாணவன் இளம் விஞ்ஞானியாக பேசப்படும் வரிசையில் இந்த இணைந்துள்ளார்.