பிறந்து 40 நாட்கள் ஆன பிஞ்சுக் குழந்தையை தந்தையே ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கேரள மாநிலத்தில் இருக்கும் உள்ள பச்சலூர் பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவர் தான் பெற்ற குழந்தை என்று கூட பாராமல் பிறந்து 40 நாட்கள் ஆன பெண் குழந்தையை பெயர் சூட்டு விழா நடந்த அன்று ஆற்றில் வீசி கொலை செய்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோர் நடுவே தகராறு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. குழந்தையின் தாய்க்கு வேறு ஒரு திருமணம் நடந்து குழந்தை ஒன்று இருக்கும் நிலையில் இந்தக் குழந்தையை தந்தை எடுத்துச் சென்றுள்ளார். மாலை வேளைக்குள் குழந்தையை கொண்டு வந்து விடுவதாக எடுத்துச் சென்ற அவர் இரவு வரை வீடு வந்து சேரவில்லை.
இதனால் குழந்தையை பெற்ற தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காவல்த்துறையினர் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கொடுத்த தகவலின்படி ஆற்றில் தேடுதல் பணியைத் தொடங்கினர். அப்போது குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து குழந்தையை கொன்ற தந்தையிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.