கோலாகலமாக நடந்த திருமணம் பலருக்கும் வருத்தத்தை கொடுக்கும் விதமாக அமைந்துவிட்டது.
ஜெர்மனியின் ஹெசெ மாகாணத்தில் திருமணம் ஒன்று மிகவும் விமர்சையாக நடைபெற்றது. கோலாகலமாக நடந்த அந்தத் திருமணத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். ஆனால் அத்திருமணம் கொரோனாவை அதிவேகமாக பரப்பும் விழாவாக மாறி மொத்த நகரத்தையும் சிக்க வைத்துவிட்டது. திருமண விழாவில் பங்கேற்ற மூன்றில் ஒரு பகுதியினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மேலும் தொற்று பரவாமல் இருக்க நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் தனிமைப் படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளுக்கு கீழ் வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். கண்காட்சி நடத்தும் ரொஹ்ரிக் என்பவர் வெகு நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் தனது தொழிலை ஆரம்பித்தார். ஆனால் அதனை இத்திருமணம் மீண்டும் மூடி வைத்து விட்டது. காரணம் கண்காட்சி தொடங்கினால் பலரும் அதனை பார்க்க வருவார்கள். இதனால் தொற்று மக்களிடையே பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதால் அவரது தொழிலை மூட வேண்டிய சூழல் உருவானது.
இதனால் அவருக்கு வருமானம் இல்லாமல் போனதை மறுக்க முடியாது. இதுகுறித்து அவர் கூறுகையில் எப்போது இந்த கொரோனா அழியும் என காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார். தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்த மற்றவர்களை சிக்கலில் மாட்டிவிட்ட குடும்பத்தினர் நடத்திய திருமண விழாவின் தீமையை அவர்களுடன் சேர்ந்து நகர மக்களும் அனுபவிக்கின்றனர்.