தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கண்ணுக்கு மேல் பாம்பு கவ்விப் பிடித்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் கூலிங்கா என்ற பகுதியில் வசித்து வருபவர் எமிலி என்ற பெண். சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்த அவர் சட்டென்று விழித்தார். அப்போது அவரது வலது கண்ணுக்கு மேல் நெற்றியில் கிளிப் போன்று மாற்றியது போல் உணர்ந்த அவர் கண் விழித்துப் பார்த்தபோது பாம்பு ஒன்று அவரது நெற்றியை கவ்வி பிடித்து தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ந்து போனார்.
உடனடியாக அவரது கணவர் ஜேசன் எழுப்ப அவர் நம்பாமல் இருந்துள்ளார். பின்னர் அறையின் லைட்டைப் போட்டபோது தலையணையின் அருகே 24 இன்ச் நீளம் கொண்ட பாம்பு ஊர்ந்து சென்றதை தம்பதி பார்த்துள்ளனர். அது விஷப் பாம்பாக இல்லை என்றாலும் நோய்க் கிருமிகள் உடலுக்குள் சென்று விடக்கூடாது என்ற காரணத்தினால் எமிலி சிகிச்சை எடுத்து வருகிறார். நடந்த சம்பவம் குறித்து சிறிதும் பயம் கொள்ளாத எமிலி சக தோழிகளுடன் இதனை விறுவிறுப்பான கதை என சொல்லி வருகிறார்.