10 வயது சிறுமியிடம் தவறாக நடந்த டீன் ஏஜ் இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
கனடாவின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் கேல்ரியை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி செல்ல காலை 8 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அச்சமயம் சிறுமியை டீன்ஏஜ் இளைஞர் ஒருவர் வழிமறித்து அவரிடம் மோசமாக நடந்துள்ளார். பின்னர் அங்கிருந்து சென்ற மாணவி தனது பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் அந்த இளைஞன் செய்த செயலை கூறியுள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியிடம் தவறாக நடந்த அந்த இளைஞனுக்கு கருப்பு நிறத்தில் சுருட்டை தலைமுடி இருக்குமென்றும் அந்த இளைஞன் நீலநிறத்தில் மாஸ்க் அணிந்து இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் அந்த நபரை விரைந்து தேடி வரும் நிலையில் அவர் பற்றிய தகவல் யாருக்கேனும் தெரியவந்தால் காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.