Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மிரட்டும் வறுமை…. கணவனின் கொடுமை…. சடலமாக அம்மா… வாயில் நுரையுடன் மகள்… விழுப்புரத்தில் துயரம் …!!

குடும்ப பிரச்சினையினாலும் கடன் பிரச்சினையினாலும் தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் சித்தேரிகரை பகுதியை சேர்ந்த தம்பதியினர் கஜேந்திரன்-கவிதா. இத்தம்பதிகளுக்கு பவித்ரா மற்றும் சர்மிளா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். கஜேந்திரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தை நடத்த கவிதா பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார். மிகுந்த வறுமையில் வாடி வந்த அந்த குடும்பத்தில் கஜேந்திரனின் தொல்லை அதிகரித்து கொண்டே சென்றது.

இது ஒருபுறமிருக்க கடன் வாங்கிய இடத்தில் பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் கவிதா வேதனையில் இருந்துள்ளார். இதனையடுத்து வெறுத்துப்போன கவிதா மகள்களுடன் சேர்ந்து தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். எனவே வீட்டில் கோவிலுக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு மகள்களை அழைத்துச் சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் மூன்று பேரையும் தேடி சென்றனர்.

அப்போது அதே பகுதியில் இருந்த ரயில் தண்டவாளத்தில் கவிதா உயிரற்ற சடலமாகவும் இரண்டு மகள்கள் வாயில் நுரையுடனும் தென்பட்டனர். இரண்டு மகள்களில் மூத்த மகள் மரணம் அடைந்த நிலையில் இளைய மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Categories

Tech |