Categories
தேசிய செய்திகள்

OCT- 1 முதல் கட்டாயம்….. ஸ்வீட் வாங்கும் முன் இதை கவனிங்க….. FSSAI அறிவுரை….!!

அக்டோபர் 1 முதல் கடைகளில் உணவுப்பொருட்களை வாங்கும் மக்கள் கீழ்கண்ட நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

கொரனோ பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தளர்வுகளில், பல செயல்பாடுகளுக்கு அரசு சார்பில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு பொருட்கள் விற்பனை என்பது சாதாரண நாட்களை போல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பல மாதங்களுக்குப் பிறகு எப்போதும் போல் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், ஒரு சிலர் காலாவதியான உணவுப் பொருட்களை கடைகளில் வைத்து விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. அதன்படி, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் கடைகளில் இனிப்பு பண்டங்களை சில்லரை விற்பனை செய்யும்போது காலாவதியாகும் தேதியை குறிப்பிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உணவு தர கட்டுப்பாட்டு அமைப்பான FSSAI அறிவித்துள்ளது. அதன்படி,

பொட்டலமாக விற்கப்படும் உணவுப் பொருட்கள் மீது இந்த தேதிக்குள் பயன்படுத்துவது சிறப்பானது என தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் உற்பத்தி செய்த தேதி அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த முடிவானது தற்போது எழுந்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்டதல்ல, தொடர்ந்து மக்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மக்களும் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கும் போது தேதியை சரி பார்த்து வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Categories

Tech |