கொரோனா தொற்றை ஒன்றரை மணி நேரத்தில் துல்லியமாக கண்டறியும் மருத்துவ உபகரணத்தை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த உபகரணத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தொற்றை உறுதி செய்ய பிசிஆர் சோதனை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் பரிசோதனை முடிவுகளை பெற ஒரு நாள் முதல் 3 நாட்கள் வரை தேவைப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ள பிக்குவின் பயோடெக் என்ற நிறுவனம் கொரோனா பரிசோதனையை ஒன்றரை மணி நேரத்தில் துல்லியமாக கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர். உபகரணத்தை கண்டறியப்பட்டுள்ளது. இந்த உபகரணம் கொரோனா தொற்றை துல்லியமாக கண்டறியும் என்றும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.