எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் எஸ்பிபி கோபமான தருணம் குறித்து பிரபல இயக்குனர் பகிர்ந்துள்ளார்.
பின்னணி பாடகரான எஸ்பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்த அவரது உடல் நேற்று தாமரைபக்கத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் பிரியதர்ஷன் எஸ்பிபி அவர்களுடன் தனக்கு இருந்த அனுபவத்தை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எஸ்பிபி அவர்களை முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வைத்து பார்த்தேன். அச்சமயம் வயலின் இசைக்கலைஞர் ஒருவர் பண உதவி கேட்டு எஸ்பிபியை பார்க்க வந்திருந்தார். எஸ்பிபி அங்கு வந்த உடன் வயலின் கலைஞர் அவரது காலில் விழுந்து விட்டார். இதனால் எஸ்பிபி மிகுந்த கோபம் கொண்டார்.
இதுவரை முகத்தில் சிரிப்பு இல்லாமல் அவரை பார்க்காத நான் முதல் முறையாக கோபம் கொண்ட அவரை பார்த்தேன். ஆனாலும் அடுத்த நிமிடமே அந்த வயலின் கலைஞரை கூப்பிட்டு, உங்களை விட நான் வயதில் மூத்தவனாக இருந்தாலும் உங்கள் குரு, பெற்றோர் தவிர வேறு யாருடைய காலிலும் விழாதீர்கள் என அறிவுரை கூறினார்” என தெரிவித்துள்ளார்