கடகம் ராசி அன்பர்களே..! உங்கள் பாதையில் தடைகளும் தடங்கல்களும் இன்று ஏற்படும்.
எல்லா திசைகளிலும் ஏற்படும் போட்டியின் காரணமாக வியாபாரத்தில் ஆதாயம் குறையும். சந்திராஷ்டமம் தினம் தொடங்குவதால் கொஞ்சம் பொறுமையாக தான் செயல்பட வேண்டும். மனைவியின் செயலால் கொஞ்சம் உறவுகளே பகையாக கூடும். சாதகமான பலன் பெறுவதற்கு இறைவனை வழிபடுங்கள். வாக்கு வாதம் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். வாக்குறுதிகள் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். பணம் கொடுக்கும் பொழுதும் சரி வாங்கும் பொழுதும் சரி எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.
பயணங்களின் பொழுதும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். எடுக்கும் காரியங்களில் ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். வெற்றி பெறுவதற்கு கூடுதலாக தான் உழைக்க வேண்டியிருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை ஏதும் கொடுக்காது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் கொள்ளுங்கள். வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கடன் பிரச்சனைகளை தயவுசெய்து கோபம் கொள்ளாமல் பேசுங்கள். அனைவரையும் அனுசரித்துச் சென்றால் இன்று நாள் உங்கள் வசம் இருக்கும். மற்றவர்களுக்கு சிறு உதவிகளை செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். ஆனால் இப்ப இருக்கக் கூடிய சூழ்நிலையில் உதவிகளை சரிபார்த்து கொடுங்கள். அரசியல் துறையை சார்ந்தவர்கள் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கு.
இன்று புரிந்துகொண்டு பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவக் கண்மணிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். விளையாடும் போதும் சரி படிக்கும் போதும் சரி கவனம் என்பது வேண்டும். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் இன்று கண்டிப்பாக யோசித்து எதையும் செய்யுங்கள். நிதானத்தை நீங்கள் கண்டிப்பாக இன்று கடைப்பிடித்து தான் ஆகவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்களில் ஓரளவு வெற்றி கிடைக்கும். என்று உங்களுக்கு அதிர்ஷ்டமான தசை: தெற்கு, அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5, அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் பிங்க் நிறம்.