கொரோனா காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வழக்கமாக மருத்துவத்திற்கு தேவைப்படும் திரவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் நாளொன்றுக்கு 750டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்பொழுது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாளொன்றுக்கு 2,800 டன் வரை தேவை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெரும்தொற்றுக்கு மத்தியில் நாட்டில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதிச்செய்ய ஆறு மாதங்களுக்கு அதன் விலையை கட்டுக்குள் வைக்கவும் விலை உயர்வை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துவிலை ஆணையம் தெரிவித்துள்ளது. பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் விலையை கட்டுப்படுத்த முடியும் எனவும் அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.