அதிமுக செயற்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்தியாவில் சிறந்த நிர்வாகி, மனதில் பட்டதை பேசுபவர் பிரதமர் மோடி என்று தெரிவித்தார். திமுக தலைவர் முக. ஸ்டாலின் ஆசை நிறைவேறாத ஆசையாகவே முடியும் என்று தெரிவித்த செல்லூர் ராஜு அதிமுக செயற்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும், எந்த முடிவை எடுத்தாலும் தேர்தலில் வெற்றி ஒன்றை கருத்தில் கொண்டு அதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் பேசினார்.