Categories
கிரிக்கெட் விளையாட்டு

“DC vs CSK” பாட்டி இறந்துட்டாங்க….. வருத்தமா இருக்கு….. வாட்ஷன் ட்விட்க்கு ரசிகர்கள் ஆறுதல்…..!!

Ipl 2020 டெல்லி அணியுடன் விளையாடியது குறித்து சென்னை அணியின் வீரரான ஷேன் வாட்சன் தனது பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 

கொரோனா  பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த வருடம் ஐபிஎல் 2020 காண சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில்  பல  அணிகள்  விளையாடினாலும், தமிழகத்தை பொறுத்த வரையில்,  சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே அதிக அளவில் இருந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை சென்னை அணி விளையாடிய முதல் போட்டியில் மட்டுமே பூர்த்தி செய்தது. அதற்கு அடுத்தபடியாக, விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்தது ரசிகர்களிடையே பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அதேபோல்,

கடந்த  சீசனில் சென்னை அணியை சேர்ந்த வாட்சன் சிறப்பாக அணிக்காக விளையாடினார். அவரது ஆட்டம் இந்த வருடமும் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், இந்த வருடம்  மூன்று போட்டிகளிலும் அவர் சரியான முறையில், Performance செய்யவில்லை. இந்நிலையில் டெல்லி அணியுடனான, போட்டியில் தனது பாட்டி இறந்துவிட்டார் என்ற செய்தியை சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், நான் எனது அன்பை எனது குடும்பத்தினருக்கு வழங்கியிருக்கிறேன். எனது தாயாருக்கு எனது பாட்டி சிறந்த அம்மாவாக இருந்தார்கள்.  இந்த இக்கட்டான தருணத்தில் எனது குடும்பத்தினருடன் என்னால் இருக்க முடியாததற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என உருக்கமாக பேசியுள்ளார். பாட்டியை  இழந்த சோகத்திலும், சென்னை அணிக்காகவும்  அதன் ரசிகர்களுக்காகவும்  தன்னால் முடிந்தவரையிலான  முயற்சிகளை செய்து அவர் விளையாடியது  ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Categories

Tech |