கிங்ஸ் லெவன் பஞ்சாப்அணி 20 ஓவர் முடிவில்7 விக்கெட் இழந்து 163 ரன்கள் குவித்துள்ளது
ஐ.பி.எல் 37 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயிலும், கே எல் ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
கேஎல் ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த மயங் அகர்வால் 2, டேவிட் மில்லர் 7 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருந்தாலும் கெய்ல் தனது சிறப்பான ஆட்டத்தால் அரைசதம் கடந்தார். அதிரடியாக விளையாடிய கெய்ல் 37 பந்துகள் 69 ரன்கள் (5 சிக்ஸர், 6 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம் கர்ரன் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றமளித்தார். அதன் பிறகு மந்தீப் சிங் அவர் பங்குக்கு 30 ரன்களும், அஷ்வின் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ஹர்ப்ரீத் 20* (12) ரன்களும், வில்ஜோன் 2* ரன்களும் எடுக்க பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 163 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக லமிச்சானே 3 விக்கெட்டுகளும், ககிசோ ரபாடா, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 164 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்விஷாவும், ஷிகர் தவனும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.