சென்னையில் ஓஎல்எக்ஸ் மூலம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே இருந்த சமயங்களில் அவர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது அவரவர் மொபைல் போன் தான்.
மக்கள் அடிக்கடி இந்த மொபைல் போன் பயன்படுத்துவதை உணர்ந்த மோசடியாளர்கள், அதன்மூலம் அவர்களை ஏமாற்ற நினைத்து பல மோசடி வேலைகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்துள்ளனர். அந்த வரிசையில்,
சென்னையில் ஓஎல்எக்ஸ் இணையதளம் மூலம் ரூபாய் ஒரு லட்சத்து 95 ஆயிரம் மோசடி நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். OLX மூலம் செல்போன் உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் வாங்கி தருவதாக கூறி மோசடி நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி அரவிந்த் என்பவரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் ஆன்லைனில் பொருட்களை மக்கள் வாங்கும் முன் இதுபோன்ற மோசடியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ‘