விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர்வளாகம் அருகே மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு அரங்கில் உள்ள மைதானத்தில் நடைப்பயிற்சிக்கும், விளையாடுவதற்கும் ஏராளமானோர் வருவது வழக்கம். ஐந்து மாதகால கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் கடந்த 7-ம் தேதி விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு திறக்க வேண்டிய விளையாட்டு அரங்கம் திறக்காமல் மூடப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்டபோது நேற்று பெய்த மழையால் விளையாட்டு அரங்கை திறக்க வேண்டாம் என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உத்தரவிட்டதாக விளையாட்டு அரங்க ஊழியர்கள் தெரிவித்தனர்.