சொத்துக்களை முடக்கும் வழக்கில் தனக்கு எந்த சொத்தும் இல்லை என அனில் அம்பானி தெரிவித்துள்ளார்
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனங்கள் அவற்றிற்கு இருந்த 69 லட்சம் ரூபாய் கோடி ரூபாய் கடனை சரி செய்ய சீனாவின் மூன்று வங்கிகளில் 51 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கின. இதற்கு அனில் அம்பானி தனிப்பட்ட முறையில் உத்தரவாதம் அளித்து இருந்தார். ஆனால் இந்தக் கடனை திரும்ப செலுத்தாததால் அனில் அம்பானியின் அனைத்து சொத்துக்களையும் உடனடியாக முடக்க வேண்டும் என சீனாவின் 3 வங்கிகள் ஒன்றிணைந்து பிரிட்டனில் இருக்கும் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தன.
இந்த வழக்கில் அனில் அம்பானி தனக்கென்று தனிப்பட்ட சொத்துக்கள் இல்லை என தெரிவித்திருந்தார். இதனை மறுத்த வங்கிகள் அனில் அம்பானிக்கு தனி விமானம், மும்பையில் இரண்டு அடுக்கு சொகுசு பங்களா, சொகுசு கார்கள், மனைவிக்கு அம்பானி பரிசளித்த ஹெலிகாப்டர் போன்ற சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்தனர். இதற்கு அணில் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் சொத்துக்களை தவிர என்னிடம் ஒரு சொத்தும் இல்லை என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து உலக அளவில் அனில் அம்பானிக்கு இருக்கும் 75 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்து பற்றிய விபரங்களைக் கொடுக்குமாறு உத்தரவிட்டது நீதிமன்றம்.
இந்த வழக்கு தொடர்பான குறுக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது அதில் வீடியோ கான்பரன்சில் பேசிய அனில் அம்பானி எந்த ஒரு தனிப்பட்ட சொத்தும் தன்னிடம் இல்லை. யுகத்தில் தான் நான் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அதில் எந்த ஒரு உண்மையும் இல்லை. நான் மிகவும் எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறேன். ஏராளமான கடன்பட்டு சொத்துக்கள் அனைத்தையும் இழந்து விட்டேன்.
இந்த வழக்கு செலவுகளைக் கூட எனது மனைவியின் நகைகளை விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்து நடத்துகிறேன். எனக்குத் தேவையான அனைத்தையும் என் குடும்பத்தினர் மட்டுமே பார்த்துக் கொள்கின்றனர் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அம்பானி குறுக்கு விசாரணையில் அளித்த தகவலின் அடிப்படையில் கடன் தொகையை சட்டப்பூர்வமாக சீன வங்கிகள் பெற நடவடிக்கை எடுக்கலாம் என்று லண்டன் நீதிமன்றம் கூறியுள்ளது.