தமிழக துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமையகம் வந்துள்ளார்.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில் மூன்றாவது முறை அதிமுகவை ஆட்சியை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அதேபோல முதல்வர் வேட்பாளர் யார் என்றெல்லாம் இன்னும் சற்று நேரத்தில் ஆலோசிக்கப்படும் இருக்கின்றன. அதிமுக செயற்குழுவில் பங்கேற்க நிர்வாகிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
மேலும் இன்றைய செயற்குழு கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து பேசக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழக துணை முதல்வர் தற்போது செயற்குழு கூட்டத்திற்கு அதிமுக தலைமையகம் வந்துள்ளார். அங்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரின் உருவம் பொறித்த மாஸ்க் அணிந்து கோசங்களை எழுப்பி வரும் வந்த வண்ணம் உள்ளனர்.
முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களும் சந்தித்து பேசியுள்ளார் நிலையில் இன்னும் சற்று நேரத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்க இருக்கிறது