சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சொல்லி அதிமுக செயற்குழுக் கூட்டம் அதிமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவை பொறுத்தவரை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை அந்த கட்சி ராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்தது. அவரே பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்தினார். ஆனால் ஜெயலலிதா மறந்த பிறகு அதிமுகவில் உருவாகியுள்ள இரட்டை தலைமை பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சை தொடர்ந்து இருந்து வருகின்றது. சட்டமன்ற தேர்தலை தமிழகம் விரைவில் சந்திக்க உள்ள நிலையில் அதிமுகவின் முகமாக யார் இருக்கப்போகிறார்கள் ? முதலமைச்சராக வேட்பாளராக கட்சி யாரை தேர்ந்தெடுக்க போகின்றது என்ற எதிர்பார்ப்பு கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
கட்சிக்குள் மட்டுமே பேசப்பட்டு வந்த இந்த பிரச்சனை என்பது கடந்த மாதம் வெளிப்படையாக பொதுவெளியில் பேசப்படக் கூடிய நிலைக்கு வந்தது. அமைச்சர்கள் உடைய கருத்தால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்ததையடுத்து இன்று காலை செயற்குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக தேர்ந்தெடுக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு என்பது கட்சி தொண்டர்களிடையே வெகுவாக எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடியுள்ளது.