கேரளாவில் ஏற்கனவே நிச்சயக்கப்பட்டதால் கொரோனா பாதித்த பெண்ணுக்கு கோவிட் சிகிச்சை மையத்தில் திருமணம் நடைபெற்றது.
கொச்சி அருகே உள்ள மட்டாஞ்சேரி என்ற இடத்திலுள்ள சிகிச்சை மையத்தில் சாயிசா என்ற பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது கொரனோ நோயாளிகள் உற்சாகமாக ஆடி பாடினர். கொச்சியை சேர்ந்த சாயிசாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த நியாஸ் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் மணப்பெண்ணிற்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மட்டஞ்சேரி சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இருவீட்டாரும் திருமணத்தை திட்டமிட்டபடி நடத்த முடிவு செய்ததால் கொரோனா சிகிச்சை மையத்திலேயே திருமணம் நடைபெற்றது.