நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 20,000 கோடி மதிப்புள்ள நிதி வழங்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. பதில் 2020-2021 க்கான மாநிலங்களுக்கான முதல் கோரிக்கையின் அடிப்படையில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.20,000 கோடியை வழங்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் தேவையான ஒழுங்குமுறை மூலதனத்தை பூர்த்தி செய்வதற்கு வங்கிகளுக்கு மூலதனத்தை வழங்க இயலும். அடுத்ததாக வரும் வங்கிகளின் இரண்டாவது காலகட்டம் முடிவுகள் எந்தெந்த வங்கிகளுக்கு ஒழுங்குமுறை மூலதனம் தேவை என்பதை முடிவு செய்யும்.
அதற்கு ஏற்றவாறு மற்றும் மூலதன பத்திரங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.பொதுத்துறை வங்கிகள் நடப்பு நிதியாண்டில் பங்கு மற்றும் பத்திரங்கள் மூலமாக மூலதனத்தை திரட்டுவதற்கு இதற்கு முன்னதாக பங்குதாரர்களின் ஒப்புதலை பெற்றிருக்கின்றன.அரசாங்கம் நடப்பாண்டில் பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தை செலுத்த வரவு செலவு திட்டத்தில் எந்த ஒரு உறுதியும் செய்யவில்லை. அனைத்து வங்கிகளும் தங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு சந்தையிலிருந்து மூலதனத்தை அரசாங்கம் திரட்டும் என உறுதியாக நம்பியது.
ஆனால் அரசு பொதுத்துறை வங்கிகளில் 2019-2020 நிதியாண்டில் ரூ.70 ஆயிரம் கோடி செலுத்தி இருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த நிதியாண்டில் அரசாங்கத்திடமிருந்து ரூ.16,091 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றது.யூனியன் பாங்க் ஆப் இந்தியா ரூ.11,768 கோடியும், கனரா வங்கிக்கு ரூ.6,571 கோடியும், இந்தியன் வங்கிக்கு ரூ.2,534 கோடியும் கிடைத்தன. இதேபோல், அலகாபாத் வங்கிக்கு ரூ.2,153 கோடியும், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ரூ.1,666 கோடியும், ஆந்திர வங்கிக்கு ரூ.200 கோடியும் கிடைத்துள்ளன. இந்த மூன்று வங்கிகளும் தற்போது மற்ற வங்கிகளுடன் இணைந்திருக்கின்றன.