ஊழல் புகார்களை கூறும் மொட்டை கடிதங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ஊழல் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் புகார்களை குறிப்பிட்டு ஊர், பெயர் எதுவும் குறிப்பிடப்படாமல் வரும் மொட்டைக் கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் இதற்கு முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது.இருந்தாலும் அதன் பிறகு முட்டை கடிதங்களை அடிப்படையாகக் கொண்டு சில அரசு துறைகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
அதனால் தங்களின் உத்தரவை மீறி மொட்டை கடிதத்தில் குறிப்பிடப்படும் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அந்த அரசுத்துறைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊழல் கண்காணிப்பு ஆணையம் எச்சரித்துள்ளது.