தீ விபத்தில் விசைத்தறி தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி பகுதியில் வசிப்பவர் கந்தசாமி. 65 வயதான இவர் விசைத்தறி தொழிலாளி. கடந்த 23 ஆம் தேதி டீ வைப்பதற்காக சிலிண்டர் அடுப்பை பற்ற வைக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது.
அதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.