தமிழக முதலமைச்சரை பற்றி அவதூராக பதிவிட்ட இளைஞனனை போலீசாரால் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சாமி.அவர் தனது முகநூலில் தமிழக முதலமைச்சர் பற்றியும், அரசு அதிகாரிகள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பற்றியும், அவதூறாகவும் ,வன்முறை தூண்டும் விதமாகவும், சிலர் பதிவேற்றம் செய்து உள்ளார்கள்.
சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாவூர்சத்திரம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதை ஏற்ற காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டபோது முகநூலில் அவதூறு பரப்பியது அதே பகுதியில் வசிக்கும் முருகையன் என்பவரது மகன் கார்த்திகேயன் என்பது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.