தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தொண்டர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆனாலும் அவர் நலமுடன் இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. மியாட் மருத்துவமனையில் பிரேமலதா விஜயகாந் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தேமுதிக பொருளாளராக இருக்கக்கூடிய பிரேமலதாவுக்கு கடந்த சில தினங்களாக இருந்த லேசான அறிகுறிகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து பிசிஆர் டெஸ்ட் எடுத்துள்ளார். அப்போது அவருக்கு பாசிட்டிவ் இருப்பது தெரிய வந்துள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்னதாக விஜயகாந்துக்கு பாசிட்டிவ் ஏற்பட்டது. அவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அவரின் மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது தொண்டர்களை கவலையடைய வைத்துள்ளது.தற்போது அவருக்கு எந்த உடல்நல பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறார் என்று மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.