Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்களும் அப்படி தான்… நானும் அப்படி தான்… சசிகலாதான் காரணம்… மல்லுக்கட்டிய ஓபிஎஸ், இபிஎஸ் …!!

சசிகலாவால் தான் நீங்கள் முதல்வராக தேர்வு செய்யப்பட்டீர்கள் என ஓபிஎஸ், இபிஎஸ் மாறிமாறி குற்றம் சாட்டிக் கொண்டது நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில்  வெற்றி வியூகங்களை அரசியல் கட்சிகள் நகர்த்தி வருகின்றனர். பிரதான கட்சியான திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் தேர்தலுக்கான வேலைகளை தற்போதே தொடங்கி விட்டன. குறிப்பாக எதிர்க்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி மு.க ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறோம் என்று ஏறக்குறைய அறிவித்து விட்டன.

ஆனால் ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த ஒரு மாதமாகவே நீடித்து வந்த நிலையில் இது குறித்து மாறி மாறி அமைச்சர்கள் கருத்து தெரிவித்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் இன்று அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டம் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று முடிந்தது. இதில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையோடு இணைந்து சந்திக்க வேண்டும் வேண்டுமென்று தீர்மானம்  நிறைவேற்றப்பட்டன.

அதேபோல தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு, இரு மொழிக் கொள்கை போன்ற 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து முதலமைச்சர் வேட்பாளர் குறித்த விவாதத்தில் செயற்குழு உறுப்பினர்கள் காரசாரமாக பேசினர். ஒரு கட்டத்தில் OPS, EPS இருவருக்குமிடையேயான விவாதமாகவும் இது மாறியது.

அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நான் ஜெயலலிதாவால் முதல்வராகப் பட்டேன். ஆனால் நீங்கள் சசிகலாவால் தான் முதல்வரானீர்கள் என்று தெரிவித்தற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, நீங்களும் சசிகலாவால் தான் மூன்று முறை முதல்வராக மாறினார்கள். நான் நல்லபடியாக ஆட்சி நடத்தவில்லையா ? என்னுடைய ஆட்சியில் என்ன குறை ?

கொரோனா காலத்திலும் சிறப்பாக பணியாற்றுகிறேன் என்று பிரதமரே இந்த ஆட்சி சிறப்பாக உள்ளது என பாராட்டியுள்ளார் என பதில் அளித்துள்ளார். துணை முதல்வர் இந்த ஆட்சி காலத்தில் மட்டும் தான் நான் துணை முதல்வராக இருக்க முடியும் என்றும்,  வரும் காலங்களில் என்னால் துணை முதல்வராக முடியாது என்றும் தெரிவித்ததாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |