Categories
தேசிய செய்திகள்

 கள்ளக்காதல் ஜோடிக்கு இடையே தகராறு… இளம்பெண் அடித்து கொலை…!!!

பாலக்காடு அருகே கள்ளக்காதல் ஜோடிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண்ணை கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் 39 வயதுடைய செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் வேலை தேடிச் சென்றுள்ளார். அங்கு 52 வயதுடைய அம்சா என்பவரது வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அம்சாவிற்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.இந்த நிலையில் அம்சா மற்றும் செல்வி ஆகிய இருவருக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டதால் செல்வியை பாலக்காடு அட்டப்பாடி அருகே இருக்கின்ற கற்குடி என்ற கிராமத்தில் அம்சா குடி வைத்துள்ளார்.

அப்பகுதியில் அம்சா லாட்டரி விற்பனையும், செல்வி 100 நாள் வேலை திட்டத்திலும் வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மிகுந்த ஆத்திரமுற்ற அம்சா அருகிலிருந்த கட்டையை எடுத்து செல்வியின் தலையில் அடித்திருக்கிறார். அதில் பலத்த காயம் அடைந்த செல்வி ரத்த வெள்ளத்தில் மூழ்கி உயிருக்கு போராடிய சமயத்தில் கத்தியை எடுத்து செல்வியின் வயிற்றில் அம்சா குத்தியுள்ளார். அதில் பரிதாபமாக உயிரிழந்த செல்வியை அங்குள்ள கிணற்றில் தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் செல்வியின் உடல் கிணற்றில் மிதப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் செல்வியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அம்சாவை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் செல்வியை தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

 

Categories

Tech |