Categories
உலக செய்திகள்

மணமேடையில் மயங்கிய மணப்பெண்… தாங்கிப்பிடித்த மணமகன்… பின் சிரித்த திருமணத்திற்கு வந்தவர்கள்..!!!

திருமணத்தின் போது மணமகள் வலிப்பு வந்து சரிந்து விழுந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரிட்டன் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த Hayley என்ற பெண் தனது காதலரான Mathew-வை திருமணம் செய்வதற்காக தேவாலயத்தின் உள்ளே நடந்துசென்று கொண்டிருந்தார். தனது வருங்கால மனைவி வருவதை Mathew ஆசையுடன் திரும்பிப் பார்க்கிறார். Hayley-யை  பார்த்த அவரது பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கையசைத்து வரவேற்கின்றனர். ஆனால் மணமேடையை அடைந்த Hayley  திடீரென நிலைகுலைந்து கீழே விழுகின்றார்.

இதனை புரிந்து கொண்ட Mathew சட்டென தனது வருங்கால மனைவியை தாங்கிப்பிடிக்க உறவினர்கள் அனைவரும் பதருகின்றனர். திருமண கோலத்தில் வந்த மணமகள் Hayley  பெண்களுக்கே உரிய கருப்பை, மார்பகங்கள் போன்ற முக்கிய உறுப்புகளை இழந்தவர். உடல் உறுப்புகள் அகற்றம், புற்றுநோய் சிகிச்சை என பெரும் பாடுபட்ட Hayley -க்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இதனால் திருமணம் செய்து கொள்ள ஆசை இருந்தபோதிலும் வலிப்பு வந்து விடுமோ என்ற அச்சத்தினால் தொடர்ந்து திருமணத்தை தள்ளிப்போட்டு வந்துள்ளார்.

ஆனாலும் தான் காதலித்தவரின் துணையோடு வலிப்பை மீறி எப்படியாவது திருமணம் செய்ய முடிவெடுத்த போது தான் திருமணத்தின் போதும் அவருக்கு வலிப்பு வந்துவிட்டது. Hayley கண் விழித்து பார்த்த போது தனது காதலர் Mathew தாங்கிப்பிடித்து இருப்பதை உணர்ந்து எழுந்த அவர் தனக்கு ஒன்றுமில்லை என சத்தமிட்டுள்ளார். இதனைக் கேட்டு திருமணத்திற்கு வந்த அனைவரும் சிரித்தனர். இத்தம்பதிக்கு இப்போது திருமணம் நடைபெற்றாலும் இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |