Categories
தேசிய செய்திகள்

 மராட்டியத்தில் காவலர்களை அச்சுறுத்தும் கொரோனா… ஒரே நாளில் 189 பேர் பாதிப்பு…!!!

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 189 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் இருந்து வருகிறது. அங்கு கொரோனாவால் காவல்துறையினர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையில் மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 189 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் தற்போது வரை பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 22,818 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் நாலு காவலர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 245 ஆக அதிகரித்துள்ளது.அதுமட்டுமன்று 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவலர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 3,188 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில காவல்துறை கூறியுள்ளது.

Categories

Tech |