Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

JustIn: இ-பாஸ் கட்டாயம்….. ஆனாலும், ஒரு சலுகை தார்றோம்….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

நீலகிரிக்கு வர விரும்பும் சுற்றுலா  பயணிகள் சுலபமாக இ-பாஸ் பெறுவதற்கான வழிமுறை ஒன்றை நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் நீலகிரிக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கும் மட்டும் இ பாஸ் கட்டாயம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இ பாஸ் குறித்த முக்கிய தகவலை அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் அதில், நீலகிரி மாவட்டத்திற்குள் வருவதற்கான இபாஸ் முறையை ரத்து செய்ய முடியாது. ஆனால் சுற்றுலா வர விரும்புபவர்கள், தங்கும் வசதி ஆவணங்களுடன் இ பாஸ்-க்கு விண்ணப்பித்தால், தாமதிக்காமல் உடனடியாக அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

Categories

Tech |