மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், அந்த சட்ட மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும் காஞ்சிபுரம் மாவட்டம் கிழ் அம்பி கிராமம் பகுதியில் இருக்கக்கூடிய இடத்தில் திமுகவின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றும் விதத்திலும், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி சுமார் 90 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளில் திமுகவின் தோழமை கட்சிகள் சார்பில் அதனுடைய தலைவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். குறிப்பாக இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள், நுகர்வோர்கள், பொது மக்களுக்கு எதிரானது என்ற அடிப்படை முழக்கத்தை வைத்து இந்த போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்காக காஞ்சிபுரம் வந்த திமுக தலைவர் ஸ்டாலின் அங்குள்ள வயலில் இறங்கி, விவசாயிகள் இருக்கும் இடத்தில் விவசாய வேலைகளில் ஈடுபட்ட பெண்களிடத்தில் இந்த சட்ட மசோதா குறித்து பேசினார். அதற்கு பிறகு தற்போது அவருடைய தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் விவசாயி அல்ல விஷவாயு என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சனங்களை முன்வைத்தார்.
அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் பூதாகரமாக கிளம்பின. குறிப்பாக ஓபிஎஸ் – இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர். இது தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களை கவலையடைய செய்தது. ஒரு பக்கம் திமுக போராட்டம்… மறுபக்கம் அதிமுக மோதல் என்பது திமுகவுக்கு சாதகமாக மாறியும் அதிமுகவை நடுங்கத்தை கொடுக்கும் அளவுக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.