Categories
கிரிக்கெட் விளையாட்டு

சரியான மேட்ஜ்!… தவித்த மும்பை… RCBயை மிரட்டிய கிஷான்… பரபரப்பான சூப்பர் ஓவர்.. வென்றது கோலிப்படை..!!

மும்பை அணியை சூப்பர் ஓவரில் வென்று அசத்தியது பெங்களூரு அணி.

ஐபிஎல் தொடரின் 10ஆவது லீக் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியியும் மோதியது.. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.. அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரர்கள் மற்றும் ஆரோன் பின்ச் இருவரும் சிறப்பாக விளையாடினர்..

குறிப்பாக அதிரடியாக ஆடிய ஆரோன் பின்ச் தனது 15ஆவது அரைசதத்தை பதிவு செய்தார்.. மறுமுனையில் படிக்கல் நிதானமாக ஆடினார்.. பின் இருவரும் அதிரடியாக ஆடினர்.. படிக்கல் இரண்டாவது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார்.. பின் பின்ச் ஆட்டமிழந்தார்.. அடுத்து இறங்கிய கோலி 3 ரன்களில் வெளியேறினார்.. இருவரும் தொடர்ந்து களமிறங்கிய ஏபி டி வில்லியர்ஸ் எதிரணி பந்துவீச்சை சிக்சருக்கு பறக்க விட்டார்..

இதன்மூலம் ஐபிஎல் தொடரில் தனது 35வது அரை சதத்தை அடித்து அசத்தினார்.. இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 202 ரன்கள் குவித்தது
டிவில்லியர்ஸ் 24 பந்துகளில் 55 ரன்களும், படிக்கல் 40 பந்துகளில் 55 ரன்களும், ஆரோன் பின்ச் 35 ரன்களில் 52 ரன்களும் எடுத்திருந்தனர்..

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்து இருந்தது.. அதாவது ஓப்பனிங் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.. அதனை தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ், தொடக்க வீராக இறங்கிய டிகாக், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்..

இதனால் மும்பை அணி 11.2 ஓவரில் 78/4 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது.. பின்னர் மறுமுனையில் நிதானமாக ஆடிய இஷாந்த் கிஷன் அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினார்.. அவருடன் கைகோர்த்தார் அதிரடி வீரர் பொலார்ட்… இருவரும் சேர்ந்து மைதானத்தில் சிக்சர்களை பறக்கவிட்டனர்..

தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட கிசான் 58 பந்துகளில்
99 ரன்கள் (9 சிக்ஸர், 2 பவுண்டரி) எடுத்து வெளியேறினார்.. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது.. இசுரு உதான வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட, பொல்லார்ட் பவுண்டரிக்கு விரட்டினார்.. பொல்லார்ட் 24 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து இருந்தார்.. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு மாறியது..

பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் மும்பை அணி பேட்டிங் செய்தது.. துவக்க வீரர்களாக கிரான் பொல்லார்டும், ஹர்திக் பாண்டியாவும் களமிறங்கினர்.. மும்பை அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது.. பின்னர் பெங்களூரு அணியில் கோலியும், ஏபிடியும் களமிறங்கினர்.. 8 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டிப் பிடித்தது.. இதனால் பெங்களூரு அணி மும்பையை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.. சூப்பர் ஓவரில் பாண்டியாவுக்கு பதில் கிஷான் இறங்கியிருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது…

ஏனெனில் அவர் கடைசி வரை களத்தில் இருந்தவர்.. அதனால் அவருக்கு ஆடுகளத்தின் தன்மை தெரியும்.. ஒருவேளை அவர் இறங்கியிருந்தால் கூடுதலாக ரன்கள் சேர்த்திருக்கலாம்.. எது எப்படியோ… மொத்தத்தில் நேற்றைய ஆட்டம் மிக விறுவிறுப்பாக சென்றது..

Categories

Tech |