தனக்கு கொரோனா வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்று பாஜகவின் தேசிய செயலாளர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
சமீபத்தில் பாஜக தேசிய தலைவர்களுக்கான பட்டியலை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய அனுபம் பாஜகவில் இணைந்த போது அவருக்கு தேசிய செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் நான் ஓடிப்போய் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பதாக அனுபம் கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேற்கு வங்கத்தின் சவுத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பாஜக கட்சியின் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தேசிய செயலாளர் அனுபம் செய்தியாளர்களை சந்தித்தபோது கொரோனாவை விட மிகப்பெரிய விரோதியுடன் நமது கட்சி போராடி வருகிறது. அது மம்தா பானர்ஜி தான். எனக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டால் சற்றும் தாமதிக்காமல் ஓடிப்போய் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடித்து விடுவேன். அப்போதுதான் அவர் தொற்றினால் உயிரிழப்பவர்களின் வலியை அறிந்து கொள்வார்” என கூறியுள்ளார். இந்த கட்சி கூட்டத்தில் அனுபம் உட்பட பல நிர்வாகிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.