Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மன அழுத்தம்… பெற்றோர் இல்லாத நேரம்பார்த்து… 10ஆம் வகுப்பு மாணவன் எடுத்த சோக முடிவு..!!

பத்தாம் வகுப்பு மாணவன் பள்ளி திறக்கப்பட இருக்கும் செய்தியை கேட்டு  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அவிநாசியை  சேர்ந்தவர் செந்தில்நாதன். தனியார் வங்கி ஏடிஎம்-ல் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் இவர் மனைவி பிரதீபா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் சஞ்சய் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் வகுப்புக்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் சஞ்சய் சரியாக பாடத்தில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதனால் பெற்றோர் சஞ்சயை கண்டித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்படும் என்ற செய்தி வெளியானது. இதனால் பள்ளி சென்றால் ஆன்லைனில் கொடுக்கப்பட்ட வீட்டு பாடங்களை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளான சஞ்சய் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தந்தை வேலைக்கு சென்று விட தாய் பிரதீபா ரேஷன் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுவிட்டார்.

ரேஷன் கடையில் இருந்து வந்த பிரதீபா வீட்டில் சஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து இருப்பதை கண்டு அதிர்ந்து போனார். இதுகுறித்து அவிநாசி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சஞ்சயின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Categories

Tech |