காதலனுடன் ஏற்பட்ட தகராறில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த திவ்யா என்பவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இவர் பல மாதங்களாக ஐயப்பன் என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரது வீட்டிற்கும் இவர்களது காதல் விவகாரம் தெரிந்து கல்லூரி படிப்பு முடிந்த உடன் திருமணம் நடத்தி வைப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திவ்யாவிற்கு ஐயப்பனுக்கும் சில தினங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த திவ்யா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஐயப்பனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.