Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த பிரச்சனையும் இல்லை… நாங்கள் மருது சகோதரர்கள்…. அமைச்சர் ஆர்.பி உதயகுமார் …!!

ஒருமித்த கருத்துகளை கொண்டு வருவதே தலைமையின் வியூகம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் முடிந்து திரும்பிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், செயற்குழு உறுப்பினர் கூட்டம் குறித்து கூறும் போது, கட்சி வளர்ச்சிக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் கருத்துக்களை மனம்விட்டு எல்லாரும் பேசினாங்க. தலைமை என்ன சொல்றாங்களோ ? அதற்க்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். தலைமையின் உத்தரவு தான் எங்களுக்கு வேதவாக்கு. அம்மா அவர்கள் இருக்கும்போது எப்படி தலைமையின்  உத்தரவுக்கு எப்படி கட்டுப்பட்டோமோ  அதே போல தலைமையில் உத்தரவுக்கு கட்டுப்படுவோம்.

பொதுக்குழு – செயற்குழுவில் பேசியதை எல்லாம் நாங்கள் இங்கே பேச முடியாது.  ஆரோக்கியமான கட்சியாக எதிர்க்கட்சிகளை எப்படி எதிர் கொண்டு தேர்தல் களத்தை சந்திப்பது ?  ஒரு தாய் வயிற்றில் பிறந்த மருது சகோதரர்கள் ஆக கருத்துக்களை எல்லாம் எடுத்து வைத்துள்ளோம். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இவ்வளவு நேரம் ஜனநாயக முறைப்படி நாங்க ஆலோசனை மேற்கொண்டு உள்ளோம் என்றால் ? எவ்வளவு ஜனநாயகம் இருக்கிறது.

இவ்வளவு சுதந்திரம் இருக்கிறது ஏனென்றால் தந்தை பெரியார்,  பேரறிஞர் அண்ணா அவர்களின் வழியில் விடிய விடிய செயற்குழு, பொதுக்குழு நடந்துள்ளது. தலைவர்கள் காலத்திலும் நடந்துள்ளது. இவ்வளவு நேரம் நாங்கள் கருத்துக்களை பரிமாறியது  ஜனநாயகத்தின் அடித்தளம். கருத்துக்களை சொல்ல எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது.

அப்போதுதான் அது வலுவாக இருக்கும். யாருடைய கருத்தையும் கேட்காமல் முடிவெடுப்பது… எந்த முடிவாக இருந்தாலும், அது வீடாக இருந்தாலும், நாடாக இருந்தாலும்,  சரியாக இருக்காது. எல்லோருடைய கருத்துக்களையும் ஒருமித்த கருத்துக்களுக்கு கொண்டுவருவது தான் தலைமையின் வியூகம். அதன் அடிப்படையில் கருத்துக்கள் எல்லாம் பரிமாறப்பட்டுள்ளது.

Categories

Tech |