போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
நம் நாட்டில் இளைஞர்கள் மது, புகை உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். ஆனால், இதைக் காட்டிலும் கஞ்சா உள்ளிட்ட அதி போதை பழக்கங்கள் உள்ளன. இவை மது மற்றும் சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருட்களை காட்டிலும் மிக மிக மோசமானது என கூறப்படுகிறது.
செயற்கை உணர்வைத் தூண்டி உங்களை தவறான பாதைக்கு வழி நடத்தும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தாதீர்கள். இதனால் நல்ல உடல் நலத்தையும், மன நலத்தையும் கெடுத்து மற்றவர்கள் முன்னால் நீங்களும் உங்கள் குடும்பமும் அசிங்கப்படும் நிலையை உருவாக்க வேண்டாம். அனைவரும் இணைந்து கஞ்சா போன்ற போதைப் பொருட்களில் இருந்து தப்பித்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.