வருங்காலத்தில் ஆரோக்கியமான வாழ்வை வாழ மேற்கொள்ளக்கூடிய ஒரு சிறு வழிமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
நாம் அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய சிறுசிறு பழக்கம் வருங்காலத்தில் மிகப் பெரிய பிரச்சினைகளை நமக்கு தந்துவிடும். குறிப்பாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு முறைகளில், தற்போதைய காலத்தில் சிறு சிறு தவறுகளை மேற்கொண்டால், வருங்காலத்தில் கட்டாயம் நமது உடலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். உதாரணமாக காலை எழுந்ததும், டீ, காபி கேட்பவரா நீங்கள் இருந்தால், காலை வெறும் வயிற்றில் குடிப்பதால் அலர்ஜி உண்டாகிறது.
இதை முதலிலேயே கவனிக்காமல் விட்டால், கண்டிப்பாக பெரிய அளவிலான பிரச்சனையை இந்த அலர்ஜி(அல்சர்) பிரச்சனை ஏற்படும். எனவே இளம் சூடான நீரில் டீ காபிக்கு பதிலாக, இளம் சூடான நீரில் தேன் கலந்து பருகினால் உடல் பலமடையும். தேன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவதால் ரத்தம் சுத்தமாகி இரத்த ஓட்டமும் சீராகும்.
ஊறவைத்த பாதாம் வெந்தயத்தை சாப்பிடலாம். வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியடையும். எனவே காலை எழுந்தவுடன் டீ, காபி குடிப்பதை விட்டு விட்டு மேற்கண்ட நல்ல செயல்முறைகளில் ஈடுபட்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.