இமயமலை பயணம் சென்று வந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உமாபாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இமயமலை பயணம் சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவருக்கு அதிகமான காய்ச்சல் ஏற்பட்டதால், ரிஷிகேஷில் இருக்கின்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பிறகு வெளியான முடிவுகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தனது ஓட்டுனருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறியுள்ள அவர்,தனது உடல் நிலை குறித்து கவலை கொள்ளும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.