Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

30 நிமிடம் வீடியோவில் பேசுனாரு…. திமுக சும்மா பொய் சொல்லுது….!!

வேளாண் திருத்த சட்டத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மேயர் சிவராஜியின் 129 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதையை செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  முன்னாள் மேயர் சிவராஜ் பன்முகத் தன்மை கொண்டவர். மேயர் சிவராஜ் அவர்களின் புகழை போற்றுகின்ற வகையில் இந்த உலகம் அறிய செய்யவேண்டும். அம்மா அவர்களின் 91 – 96 ஆட்சி காலத்தில் இந்த இடத்தில்  மேயர் சிவராஜ் திருவுருவச் சிலையை திறந்து வைத்து அவருடைய புகழுக்கு பெருமை சேர்த்தார்கள்.

முன்னாள் மேயர் சிவராஜை பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர்களுக்கு அந்த காலங்களில் அட்மிஷன் கொடுப்பதில்லை. படிப்பதற்கு  அனுமதி வாங்கிக் கொடுத்து ஆதிதிராவிட மக்களின் உரிமையை நிலைநாட்டிய மேயர் சிவராஜ் அவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செய்துள்ளோம். அது போல பெண்களுடைய திருமண வயது குறைவாக இருந்த நேரத்தில்.. திருமண வயதை அதிகப்படுத்த வேண்டும் என்று சொல்லி குரல் கொடுத்து அதனை சட்டமாக்குவதற்கு காரணமாக இருந்தவர்  சிவராஜ். எனவே அவருடைய  புகழை குறிக்கின்ற வகையில் இன்று அவரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

பின்னர் பேசிய அமைச்சர் வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக பெரிய அளவுக்கு அறிக்கை விட்டு அது எல்லாம் உண்மைக்கு மாறான அறிக்கை. குறிப்பாக விவசாய மக்களை திசை திருப்புகிற செயல். மாண்புமிகு முதலமைச்சர் சொன்னது போல இந்த சட்டத்தால் எந்த விதத்திலும் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்காத விதத்திலும்,  அவர்களுடைய வாழ்வுரிமையை, விலை நிர்ணயம் எந்த அளவும் கூட விவசாய மக்களை பாதிக்கின்ற வகையில் இருக்காது.

விவசாயிகளுக்கு நியாயமான விலை கண்டிப்பாக கிடைக்கும் வகையில்தான் இந்த சட்டம் இருக்கிறது. எனவே நீண்ட அளவுக்கு விவாதம் செய்யப்பட்டு, அறிக்கை எல்லாம் கொடுக்கப்பட்டு முதலமைச்சரே கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் வீடியோவில் பேசியுள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |