Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3 மகள்களை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரத் தாய்…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெற்ற மகள்கள் 3 பேரை தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை  மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி பகல்  மற்றும் இரவு நேரங்களில் வெளியூரைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் வந்து செல்வதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் நேற்று முந்தினம் மாலை தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இரண்டு தனித்தனி அரைகளில் சிறுமிகளுடன் இருந்த ஆண்கள் இருவர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் ஒருவர் வீரவநல்லூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவல் ஆய்வாளரின் கணவரான ராஜ்மோகன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த சிறுமிகள் மற்றும் பெண் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

கைது செய்யப்பட்ட பெண் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த லதா என்பதும் தாக்கலை மேட்டுக்கடை  பகுதியில் வாடகை வீடு எடுத்து தனது மூன்று மகள்கள் மற்றும் மகளின் தோழி ஒருவரையும் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் அம்பலமானது. இதையடுத்து 4 சிறுமிகளையும் மீட்ட போலீசார் அவர்களை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் பள்ளி செல்லும் பெற்ற குழந்தைகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் லதா பெண் காவல் ஆய்வாளரின் கணவர் ராஜ் மற்றும் கூலி தொழிலாளி சுனில் ஆகியோரை கைது செய்தனர்.

தற்போது சிறுமிகள் 4 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் பரிசோதனை அடிப்படையில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தக்கலை டிஎஸ்பி தெரிவித்துள்ளார். சிறுமிகளிடம் பாலியல் ரீதியிலான தொடர்பில் இருந்த பல ஆண்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்  கூறினார். அதன்படி பின்னணியில் மேலும் பல நபர்கள் சிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |