தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், விஜயகாந்த் விரைவில் டிசார்ஜ் செய்யப்படுவார் என்று சொல்லி இருக்கிறார்கள். அவருடைய முதல் கட்ட பரிசோதனைக்கு பிறகு அவரது சார்ஜ் செய்யப்படும் என்றும்,
அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாமல் தொற்று இருந்ததாகவும் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும், கொடுக்கக்கூடிய மருந்துகளுக்கு ஏற்றவாறு அவருடைய உடல்நிலை ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அதே போல பிரேமலதா விஜயகாந்த்தும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.