Categories
தேசிய செய்திகள்

பனை மரத்தில் இப்படி ஒரு சாகசமா?… வியப்பில் ஆழ்த்திய வீடியோ பதிவு…!!!

பனை மரத்தில் ஏறி விசிறி வடிவ ஓலைகள் வெட்டும் ஒரு நபரின் செயல் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

ஒரு பனை மரம் வளர்ந்து முதிர்ச்சி அடைவதற்கு சுமார் 15 ஆண்டுகள் வரை ஆகும். பனைமரம் எந்த ஒரு வேலையும் இல்லாமல் 30 மீட்டர் வரை வளரக் கூடும். பனை மரங்களுக்கு எந்த ஒரு கிளைகளும் கிடையாது. அதன் உச்சியில் 30 முதல் 40 எண்ணிக்கை வரையிலான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். பனை மரம் ஏறுதல் என்பது ஒரு பருவகால தொழிலாகும். அந்தப் பனை மரத்தில் தன் உயிரை பணயம் வைத்து விசிறி வடிவ ஓலைக ளை வெட்டும் ஒரு நபரின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

அந்த பனை மரத்தில் ஏறிய நபர் ஓலைகளை வெட்டியவுடன் பனைமரம் வலது மற்றும் இடதுபுறமாக அதன் உயரத்திற்கு ஏற்றவாறு அங்குமிங்கும் சுற்றி நிற்கும் செயல் பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான சுகந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Categories

Tech |