Categories
உலக செய்திகள்

ஆசிரியரை பார்த்து பயந்த குழந்தைகள்… வேலையே விட்டு தூக்கிய நிர்வாகம்… ஏன் தெரியுமா?

மழலை குழந்தைகள் பயப்படுவதால் பள்ளி நிர்வாகம் ஆசிரியரை கற்பிப்பதில் இருந்து  விடுவித்து உள்ளது

பிரான்ஸ் பாலிசோ பகுதியில் இருக்கும் பள்ளியில் சில்வைன் என்பவர் மழலை குழந்தைகளுக்கு ஆசிரியராக இருந்து வந்தார். ஆனால் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பயங்கரமான கனவுகள் கண்டு தூக்கமின்றி அவதிப்படுவதாகவும் அதற்கு முக்கிய காரணம் ஆசிரியர் சில்வைன் என்றும் புகார் அளித்துள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகம் மழலைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்த சில்வைனை 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்க அறிவுறுத்தியது. சில்வைன்  தனது 27 வயது முதல் தனது உடல் முழுவதும் டாட்டூ பதிக்க தொடங்கியுள்ளார்.

டாட்டூ மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் இதற்கென்று 460 மணி நேரத்தை செலவு செய்ததோடு 35,000 பவுண்டுகளை கட்டணமாக செலுத்தி உள்ளார். பெற்றோர்கள் அளித்த புகார் குறித்து சில்வைன்  பேசியபோது “என்னை தெரிந்தவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தொலைவில் இருந்து என்னை பார்ப்பவர்களுக்கு நான் மோசமாக தெரிகின்றேன். இப்போது ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். இந்த மாற்றம் எனக்கு ஆறுதல் கொடுப்பதாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |