அக்டோபர் 2ஆம் தேதி இறைச்சி கடைகளை மூடுவதற்கு கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்..
நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழாவெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.. காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஆடு மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் இந்த விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் கோவையில் இருக்கும் அனைத்து இறைச்சி கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.. மேலும் உத்தரவை மீறும் நபர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்..