விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று சிறிது பதட்டம் காணப்படும். அதிக சௌகரியங்களை அனுபவிக்க முடியாது. நீங்கள் பொறுமையுடன் இருக்கவேண்டும். அமைதியின்மை உணர்வை தவிர்ப்பது நல்லது.
இன்று நீங்கள் உங்களின் பணிகளை முடிக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். பணியில் உங்களுக்கு கெட்டப்பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே சிறிது கவனமாக பணியாற்ற வேண்டும். நீங்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பீர்கள். இதனை உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். இன்று உங்களுக்கு பணம் வரவு, செலவு என இரண்டும் கலந்தே காணப்படும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் காணப்படும். அதிக நீரை அருந்துவது சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வது நல்லது.