விமானத்தில் பயணித்த பெண் செய்த திகைப்பூட்டும் செயலால் சக பயணிகள் அவருக்கு பேய் பிடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர்
அமெரிக்காவில் டெட்ராய்ட் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென பெண் ஒருவர் நடந்து கொண்ட விதம் சக பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் செயல் பார்ப்பவர்களுக்கு பேய் படம் ஒன்றை நினைவுபடுத்தியுள்ளது. Exorcist எனும் பேய் படத்தில் வரும் காட்சியைப் போல் அந்த பெண் திடீரென்று சத்தம் போட்டு பயணிகளின் இருக்கைகள் மேல் ஏறி ஒவ்வொரு இருக்கையாக குதித்துள்ளார்.
விமானத்தில் இருந்த பணியாளர்கள் அந்தப் பெண்ணை தடுத்து கட்டுப்படுத்த முயற்சித்தனர். சக பயணிகளின் உதவியுடன் அந்த பெண்ணை ஒரு வழியாக பிடித்து இழுத்துச் சென்றனர். இதனை பார்த்த சிலர் அந்தப் பெண்ணிற்கு பேய் பிடித்து இருக்கும் என்று கூறினர். வேறு சிலர் அவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருக்கக்கூடும், விமானத்தில் ஏறும்போது சாதாரணமாக இருந்த அவர் கழிவறை சென்று வந்த பிறகு இவ்வாறு நடந்து கொண்டார்.
இதனால் அவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறினர். என்ன காரணமாக இருந்தாலும் சிறிது நேரம் விமான பயணிகளை அந்தப்பெண் ஒரு வழி ஆக்கிவிட்டார். இதனிடையே அந்தப் பெண் ஒவ்வொரு இருக்கையாக குதிப்பதும் பணியாளர்கள் அந்தப் பெண்ணை இழுத்துச் செல்வதும் காணொளியாக வெளியாகியுள்ளது.